

நேபாள வெளியுறவு அமைச்சரை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளும் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நேபாள் சென்றுள்ளர். நேபாள வெளியுறவு அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டேவை காத்மாண்டுவில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, அவருடன் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் உள்ளிட்ட அத்துறை உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளும் உறவை மேம்படுத்துவது குறித்து சுஷ்மா ஆலோசித்தார்.
இவற்றின் மீதான மேலும் விரிவான ஆலோசனை, கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெறவுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா - நேபாளம் இடையே கூட்டுக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல், பாதுகாப்பு, எல்லை பிரச்சினைகள், பொருளாதாரம், வர்த்தக, போக்குவரத்து, மின்சாரம், நீர் ஆதாரம், கலாச்சாரம், கல்வி, ஊடகம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவது குறித்து ஆலோசிக்க்கப்பட இருக்கிறது.
சுஷ்மாவின் இந்தப் பயணம் அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்திற்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.