

கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக மாவட்ட அலுவலகம் அருகே இரண்டு நீண்ட வாள்கள், 7 இரும்புக் கம்பிகள், மற்றும் ஒரு கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளன.
பாஜக அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டுக் காம்பவுண்டு அருகே மனை ஒன்றில் துருப்பிடித்த இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கண்ணூர் கார்ப்பரேஷன் பணியாளர்கள் இந்த ஆயுதங்கள் இருப்பதை முதலில் கண்டு போலீஸுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
ஆனால் ‘கட்சியின் பெயரைக் கெடுக்க இந்த ஆயுதங்களை இங்கே கொண்டு வந்து மறைத்து வைத்திருக்கலாம்’ என்று மாவட்ட பாஜக தலைவர் பி.சத்யபிரகாஷ் தெரிவித்தார்.
“மாவட்ட கமிட்டி அலுவலகத்தில் இத்தகைய ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை” என்றார் பி.சத்யபிரகாஷ்.