

அகமதாபாத், லக்னோவில் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், 2014-15 ஆண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
அதில், " அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை மேம்படுத்துவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார்.
மேலும், 20,000 லட்சத்திற்கும் அதிகமான அளவில் மக்கள் தொகை உள்ள நகரங்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்படும் என்று அறிவித்தார்.