

சுனந்தா புஷ்கரின் மரணத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும், இது குறித்து இந்த மாத இறுதியில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் சுப்பிர மணியன் சுவாமி புதன்கிழமை கூறியதாவது: “ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பாக சில உண்மைகளை வெளியிட இருப்பதாக சுனந்தா கூறி இருந்தார். இதில், சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவின் பெயரும் பேசப்பட்டது.
இந்நிலையில் சுனந்தா மரணமடைந்தார். அவரின் உடலில் 12 இடங்களில் காயம் மற்றும் ஒரு இடத்தில் ஊசி செலுத்தப்பட்டதற்கான அடையாளம் இருந்ததாகவும், ரத்தத்தில் விஷம் கலந்திருந் ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான மஜீத் மேமான், ‘சுனந்தாவின் மரணத்தில் முறையான விசாரணை வேண்டும். இதற்கு சசிதரூர் ஒத்துழைக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அத்துல் அஞ்சான், “சுனந்தா புஷ்கரின் மரணத்தில் விசாரணை வேண்டும்” என அவர் கோரி யுள்ளார்.