

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் கடந்த 10 நாட்களாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். உயிர்ச்சேதம் இல்லாவிட்டாலும் பக்தர்களின் வாகனங்கள் சேதம் அடைவதும், பக்தர்கள் படுகாயமடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், திருப்பதி மலைப்பாதையில் விபத்துகள் நடக்காமல் இருக்கவும், பக்தர்களுக்கு எந்தவித ஆபத்துகள் வராமல் இருக்கவும் நேற்று திருமலையில் இருந்து திருப்பதி வரும் வழியில் 7-வது மைல் பகுதியில் அமைந்துள்ள அனுமன் சிலை அருகே தேவஸ்தானம் சார்பில் மகாசாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. இந்த ஹோம பூஜையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, ஆகம வல்லுனர்கள், பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.