Published : 15 Jul 2014 11:21 AM
Last Updated : 15 Jul 2014 11:21 AM

ஜூலை 19ல் வங்கி தனியார் மயமாக்கல் எதிர்ப்பு நாள்: அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

ஜூலை 19-ம் தேதியை ‘வங்கி தனியார்மயமாக்கல் எதிர்ப்பு நாளாக' அனுசரிக்க அனைத் திந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் சுமார் 5 லட்சம் வங்கி ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண் டது அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். இது பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவை எதிர்த்து வருகிறது.

இதன்படி வரும் 19-ம் தேதியை ‘பொதுத்துறை வங்கிப் பாது காப்பு மற்றும் வங்கி தனியார் மயமாக்கல் எதிர்ப்பு நாளாக' அனுசரிக்க உள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:

வங்கித் துறையைச் சீர் திருத்துவதாக நினைத்துக் கொண்டு மத்திய அரசு அதை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது. இந்தத் தீர்வு நோயைவிடக் கொடியதாகும்.

அடுத்தடுத்து வரக்கூடிய எல்லா அரசுகளுமே வங்கித் துறையைச் சீர்திருத்த முயற்சிக் கின்றன. எல்லா அரசுகளும் வங்கிகளைத் தனியார் கைகளில் ஒப்படைக்கவே விரும்புகின்றன.

உலக அளவிலான போட்டிக்கு ஈடுகொடுக்கிறோம் என்ற பெயரில் வங்கிகளை அரசு இணைக்க முயற்சிக்கிறது.

மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வணிக‌ நிறுவனங்களும் வங்கிகளைத் திறக்க அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கவும் பெருவிருப்பத்தோடு அரசு இருக்கின்றது.

நாட்டின் பல்வேறு துறை களுக்கும் முன்னுரிமை அடிப் படையிலான முறையில் கடன் வழங்குவதை நிறுத்தி பொதுத் துறை வங்கிகளின் சமூக வங்கி யியல் முறையை ஒழிக்க நினைக்கிறது அரசு.

தவிர வங்கிகளை நகர்மயமாக் குதல், உயர் வகுப்பினருக்கு மட்டுமே உரியதாக்குதல், லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுதல் ஆகிய குறிக்கோளுடன் அரசு செயல்படுகிறது.

பொதுத்துறை வங்கிகள் கடுமையாக உழைத்து ஈட்டிய லாபத்தைக் கடனாக வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய நினைக்கிறது.

வங்கிப் பணிகளையும் ‘அவுட்சோர்ஸிங்' மூலமாக வும் ஒப்பந்த அடிப்படையிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட் டுள்ளது. சுருக்கமாகச் சொல்வ தானால் 1969-ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது அரசு.

நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் இத்தகைய சீர்திருத்தங்களைக் கைவிட்டு மக்கள் சார்ந்த வங்கிக் கொள்கைகளே இப் போதைய தேவை. அதன் மூலம் மக்களின் சேமிப்புகளை அவர்களின் நலன்களுக்காகச் செலவழிக்கலாம்.

தேசிய சேமிப்பு என்பது நாட்டின் முன்னேற்றத்துக்காக இருக்க வேண்டுமே தவிர கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காக இருக்கக் கூடாது.

`வங்கியை அணுகும் உரிமை' மக்களின் அடிப்படை உரிமையாக மாற்றப்பட வேண் டும். அதற்கு பொதுத் துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும். ஆகவே வங்கிகள் இல்லாத கிராமங்களிலும் வங்கி கள் திறக்கப்பட வேண்டும்.

எஸ்.பி.ஐ. வங்கியுடன் இணைந்துள்ள வங்கிகளைச் சுதந்திரமாக இயங்க வழிவகை ஏற்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் இதர முன்னுரிமை துறைகளுக்கு அதிகக் கடன்களை வழங்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜே.பி.நாயக் குழு வின் வங்கித் துறையைச் சீர்திருத்தும் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x