Last Updated : 05 Oct, 2017 07:46 PM

 

Published : 05 Oct 2017 07:46 PM
Last Updated : 05 Oct 2017 07:46 PM

சமூக வலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்யும் போக்கு: உச்ச நீதிமன்றம் கவலை

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விவகாரம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தகுதியற்ற கருத்துக்கள், கேலி-கிண்டல்கள், அவதூறுகள், ஆவேசமான, முறையற்ற கருத்துகள், எதிர்வினைகள் வெளிவருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று உணர்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞரும் பார் அசோசியேஷன் தலைவருமான ஒருவர் சமீபத்தில் பெரும்பாலான நீதிபதிகள் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் என்று கூறியிருந்ததை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்ற நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோர் நிராகரித்தனர்.

“இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து அரசை எவ்வாறு விமர்சிக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும்” என்றனர்.

சமூக வலைத்தளங்கள் பற்றிய நீதிபதிகளின் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட வழக்குறைஞர்கள் ஃபாலி எஸ்.நாரிமன் மற்றும் ஹரீஷ் சால்வே ஆகியோர் முன்னாள் உ.பி அமைச்சர் அசாம் கான் நெடுஞ்சாலை பாலியல் பலாத்கார வழக்கில் மேற்கொண்ட கருத்து விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவிபுரிந்து வருகின்றனர்.

வழக்கறிஞர் சால்வே கூறும்போது, “நான் என் ட்விட்ட கணக்கை நீக்கி விட்டேன், அதில் அவதூறுகள் தான் வருகிறது. கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி வழக்கு ஒன்றில் தன் ட்விட்டர் கணக்கில் நடந்தது தன்னை ட்விட்டர் கணக்கை நீக்குமாறு செய்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், “நான் அவற்றைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன், ஒவ்வொன்றைப் பற்றியும் தேவையற்ற கருத்துகள் இத்தகைய சமூக வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கிறது” என்றார்.

உடனே நீதிபதிகள் அமர்வு, ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றிய உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட பல கருத்துகளில் ஒன்றை உத்தரவு என்றே தவறாகப் புரிந்து கொண்டு விவாதக்களமாகவே மாறிவிட்டது பற்றி குறிப்பிட்டனர்.

நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடக்கும் சுதந்திரமான வாக்குவாதங்களுக்கு இடையூறு அளிக்கும் எந்த ஒன்றையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் சால்வே தெரிவித்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் கோர்ட் நடைமுறைகளைப் பற்றிய தவறான கருத்துகள் பரப்பட்டு வருகின்றன் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘முன்னதாக தனிமனித அந்தரங்கத்துக்கான உரிமையில் அரசின் தலையீடு மட்டும்தான் இருந்தது, ஆனால் தற்போது இந்த மாதிரி தலையீடுகள் தனியார்களிடமிருந்தும் எழுகிறது’ என்ரு நீதிபதிகள் தெரிவித்தனர்.

உடனே வழக்கறிஞர் சால்வே, செய்தித்தாள்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் ஏதோவொரு ஆடியோவை எடுத்து வெளியிடுகிறது, அதன் உண்மைத்தன்மைப் பற்றி கவலைப்படாமல், பொறுப்பற்று செயல் படுகிறது, ‘இது தனியுரிமைக் கொள்கையில் தலையிடுவதாகாதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு உடன்பாடாக கருத்து தெரிவித்த அமர்வு, “என் வீடு எனது கோட்டை’ என்ற கருத்தாக்கம் மிக வேகமாக அழிந்து வருகிறது, காரணம் தனியார் தலையீடு என்று கூறியது.

இத்தகைய நிகழ்வுகளை கையாளும் திறன் இந்திய சிவில் சட்டங்களுக்கு இல்லை, இது பலவீனமாக உள்ளது என்று வழக்கறிஞர் நாரிமன் தெரிவித்தார்.

“இந்தப் போக்குகளைக் கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் நடைமுறை அவசரமாகத் தேவை” என்று சால்வே கூறியதை அமர்வு ஆமோதித்தது.

பொது ஊழியர், அல்லது அமைச்சர் முக்கியமான விஷயங்களில், அதாவது விசாரணையில் இருக்கும் உணர்வுபூர்வமான விவகாரம் குறித்து தங்கள் இஷ்டத்துக்கு கருத்து கூறிவிட்டு அதற்கு பேச்சு சுதந்திரம் என்று உரிமை கோரும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அரசியல் சாசன அமர்வின் கவனத்துக்கு அனுப்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x