

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற முதல் 2 நாட்களிலும் மாநிலத்தில் பரவலாக வன்முறை ஏற்பட்டது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தங்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதாக பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பாதுகாப்பு வழங்க மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதன்படி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் மையங்களை சுற்றிலும் 1 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.