இந்தி கற்பதால் தமிழ் வளரும்: இந்தி அறிஞர் கோவிந்தராஜன் பேட்டி

இந்தி கற்பதால் தமிழ் வளரும்: இந்தி அறிஞர் கோவிந்தராஜன் பேட்டி
Updated on
2 min read

நம் இந்திய மொழிகளை ஒருங் கிணைப்பதில் பாலமாக செயல் படுவதற்காக உ.பி.யின் அலகா பாத்தில் 1976-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு, ‘பாஷா சங்கம்’.

தமிழ் அறிஞர்கள் பலரின் நூற்றாண்டு விழாக்களை கொண் டாடி, அவர்களைப் பற்றி இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த அமைப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. வட இந்தியா வின் மொழி அறிஞர்களின் சிறந்த அமைப்பாக இது கருதப்படுகிறது. இதில் முதன் முறையாக முனைவர் எம்.கோவிந்தராஜன் என்ற தமிழர் பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டுள்ளார்.

இவரது தலைமைக்கு பின் சங்ககால இலக்கிய நூல்கள் பல, பாஷா சங்கம் சார்பில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தி அறிஞரான எம்.கோவிந்த ராஜன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

மீண்டும் இந்தி எதிர்ப்பு கிளம்பி யிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்தி எதிர்ப்பு என்பது 1965-க்கு முன்பு வரை எனக்கும் சரியாகத்தான் பட்டது. ஆனால் இன்றைய சூழலில் இந்தித் திணிப்பு என்ற பழைய பல்லவி தேவையில்லாத ஒன்று. அன்று மக்களிடம், “சாதாரண குடும்பத்தின் குழந்தைகள் இந்தி கற்பது கடினம். இந்தி கட்டாயம் ஆகிவிட்டால் இந்தி படிக்காதவர்கள் பின்தங்கி விடுவர்” என்று கூறப்பட்டது. அதை நம்பி, இந்தியை எதிர்த்தவர்களின் வாழ்க்கை மேன்நிலைக்கு உயர்த்தப்படவில்லை. தமிழை மட்டுமே படித்த அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை. எனவே அன்றைய இந்தி எதிர்ப்பு, ஒரு மாயை என்பது பெரும்பாலானவர்களின் கருத்து.

தற்போது இந்தி படித்தால் வேலைவாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக. வட மாநிலங்களில் தென்னிந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள மிகவும் விரும்பு கின்றனர். காரணம் தமிழர்கள் நேர்மையானவர்கள், சுறுசுறுப் பானவர்கள், திறமையானவர்கள் என்று அவர்கள் உணர்ந்திருக் கிறார்கள்.

ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்று வட இந்தியர்கள் கூறுவது குறித்து?

இந்தியால் தமிழ் அழிந்து விடும் என்று கூறுவதுபோல், ஆங்கிலத்தால் இந்தி அழிந்து விடும் என்று கூறுவதும் தவறு. ஒரு மொழியை மற்றொரு மொழி ஒருபோதும் அழிக்க முடியாது. அரசு ஆதரவால், அந்த ஆதரவு இருக்கும் வரை ஒரு மொழி சிறப்பு பெறுவது உண்மை. குறிப் பிட்ட மொழிக்கு அரசின் ஆதரவு நின்றுவிட்டால் அதன் செல்வாக்கு குறையுமே தவிர, அது அழிந்துவிடாது. ஒரு மொழியைக் கெடுப்பது வேற்று மொழி அல்ல. அந்த மொழிக்கு உரியவரால் தான் அந்த மொழி கெடுக்கப்படுகிறது.

உலக அளவில் புகழ்பெறும் தமிழ் இலக்கியங்கள், நம் நாட்டில் மட்டும் புகழ் அடையாமல் இருப்பதற்கு இந்தியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறதே?

இதற்கு தமிழர்களாகிய நாமும், நமது மொழிக் கொள்கையும்தான் காரணம். நமது இலக்கியங்களை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து சந்தையில் விட்டால்தானே தமிழ் இலக்கியங்கள் நம் நாட்டில் தேசிய அளவில் புகழடைய முடியும்?

1975-ல் அகிலனின் சித்திரப் பாவைக்கு பின் 27 ஆண்டுகள் கழித்து 2002-ல் ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் விருது கிடைத்தது. இதன் பிறகு மீ்ண்டும் இடைவெளிக்கு காரணம், ‘தமிழர்கள் இந்தியை எதிர்ப்பவர்கள்’ என்ற பாரபட்சம் என்ற கருத்து உண்மையா?

ஒரு பொருள் சந்தைக்கு வரவில்லை என்றால் அதற்கு விலை எப்படி கிடைக்கும்? தமிழில் தரமான நூல்களுக்கும் மிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கும் பஞ்சம் இல்லை. அப்படியிருக்க மற்ற மாநில மொழிகளுக்கு கிடைக்கும் அளவுக்கு தமிழ் நூல்களுக்கு அந்த விருதுகள் கிடைக்காமல் இருக்க காரணம் அவை, இந்தியில் மொழி பெயர்க்கப்படாததுதான்.

நீங்கள் இந்தியை ஆதரிக்க முக்கியக் காரணம்?

ஒரு மாநிலம் தனது மாநில மொழிக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதேபோல தேசிய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். அப்போது தான் இந்தியாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும். தமிழர்கள் மொழிக் கலையில் கை தேர்ந்த வர்கள்.

அவர்கள் இந்தி கற்பதால் நிச்சயமாக தமிழ் வளருமே தவிர அழியாது. தமிழ் அறிந்தவர்கள் தமிழனாகத்தான் இருக்க முடியும். இந்தியை கற்றுக்கொண்டால், இந்தியனாகவும் உயர முடியும் என்பது எனது கருத்தாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in