சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் குஜராத்தில் கைது

சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் குஜராத்தில் கைது

Published on

போர்பந்தர்(குஜராத்): சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தின் கடற்கரை நகரான போர்பந்தர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களின் செயல்பாடு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை போர்பந்தர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்று ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரை பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்திருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடுப்புப் படையின் டிஐஜி தீபென் பத்ரான், எஸ்.பி. சுணில் ஜோஷி, டிஒய்எஸ்பி படேல், டிஒய்எஸ்பி சங்கர் சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் போர்பந்தரில் முகாமிட்டு இந்த கைது நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in