

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்கு மும்பையில் கொலபாவில் கணேஷ் முர்த்தி நகரில் உள்ள இரண்டடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது.
விபத்துக்குள்ளான கட்டிடத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன. அப்போது, மேற்கூரை சரிந்ததால் விபத்து நடந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் மஷ்ரூப் ஷேக் என்ற 18 வயது இளைஞர் பலியானார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் மும்பை புறநகர் பகுதியான வகோலாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர் என்பது கவனிக்கத்தக்கது.