

தேசத் தந்தை மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு காந்தியின் சுய சரிதை நூலை அனுப்பி நூதனமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் அண்மை யில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அருந்ததி ராய், ``தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காந்தி குரல் கொடுக்கவில்லை. அவர் பெயரில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்'' என்று தெரிவித்தார்.
அவரது பேச்சுக்கு காந்திய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரைக் கண் டித்து மகாத்மா காந்தி தேசிய அறக் கட்டளை சார்பில் கேரள மாநிலம் கோட்டயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதி யில் காந்தியின் சுயசரிதை நூல் அருந்ததி ராய்க்கு அனுப்பி வைக் கப்பட்டது.
இது குறித்து மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் தலை வர் எபி ஜே. ஜோஸ் கூறியபோது, ``தேசத் தந்தையை தரக்குறைவாக விமர்சித்த அருந்ததிராய் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய ேவண்டும்'' என்றார்