சிறப்புமிக்க பட்ஜெட்: பாஜக

சிறப்புமிக்க பட்ஜெட்: பாஜக
Updated on
1 min read

பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சரு மான ராஜ்நாத் சிங் கூறியதாவது: “பட்ஜெட் பல புதுமையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில்களில் பாதுகாப்பு, சுகாதாரம், வேகம் ஆகியவற்றிற்கு முன்னு ரிமை அளித்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் இந்த பட்ஜெட்டை தயாரித்த பெருமை அனைத்தும் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா வையே சேரும்” என்றார் .ராஜ்நாத் சிங்.

பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறும் போது, “இது ஒரு புரட்சிகரமான பட்ஜெட். ரயில்வே துறையின் பயணம், உலக அளவில் தரமான சேவையை அளிக்கும் திசையில் செல்லத் தொடங்கியுள்ளது” என்றார்.

பாஜக ஊடகப் பிரிவு பொறுப் பாளர் காந்த் சர்மா கூறும் போது, “நவீனமயம், புல்லட் ரயில், தொழில்நுட்ப மேம்பாடு, உணவுத் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட மிக முக்கிய அம்சங் கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

நாடு முழுவதும் ரயில் பாதையை அமைக்க வேண்டும் என்ற வாஜ்பாயின் கனவை மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தனது வாக்குறுதிகளில் 30 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துவருவதன் மூலம் தனது வெறுப்புணர்வை அக்கட்சி வெளிப்படுத்தி வருகிறது.

பாஜக அரசு தனது வாக் குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும்; வெறும் அறி விப்புகளுடன் நின்றுவிடாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in