டெல்லியில் துப்பாக்கி முனையில் 10-ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்

டெல்லியில் துப்பாக்கி முனையில் 10-ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்
Updated on
1 min read

டெல்லியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் கூட்டு- பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து டெல்லி காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பள்ளி செல்லும் வழியில், ஜரோதா என்ற பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவியை 5 பேர் கொண்ட கும்பல், சுரேந்தர் பெல்வான் என்பவரது வீட்டிற்கு கொண்டு சென்று, துப்பாக்கி முனையில் கூட்டாக பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின்போது சுரேந்தர் பெல்வான் போலீஸ் உடையில் இருந்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் இருவர் சிறுவர்கள் என்றும், அதில் நான்கு பேர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர்கள் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

மேலும், இந்த சம்பவம் ஜூலை 19-ஆம் தேதி நடந்ததாகவும், இது குறித்து வெளியே யாரிடமும் கூறினால், மாணவி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதை, செல்ஃபோன் மூலம் படம் பிடித்துள்ளதாகவும், அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்றும் அந்த கும்பல் மிரட்டியதால், மாணவி அதனை மறைத்திருந்ததாகவும் பின்னர் சில உடல் உபாதைகள் காரணமாக மாணவி இதனை பெற்றோரிடம் கூறியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in