Last Updated : 10 Oct, 2017 01:10 PM

 

Published : 10 Oct 2017 01:10 PM
Last Updated : 10 Oct 2017 01:10 PM

குஜராத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 4% குறைப்பு

குஜராத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) 4% குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூபானி, ''மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, குஜராத் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 4% அளவுக்குக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

இதன் மூலம் பெட்ரோலின் விலை ரூ.2.93 காசுகளும் டீசலின் விலை ரூ.2.72 காசுகளும் குறையும்.

இதனால் புதிய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.53 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.60.77 காசுகளாகவும் இருக்கும். இந்த 4% வாட் வரிக் குறைப்பின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,316 கோடி இழப்பு ஏற்படும்.

எனினும் மக்களின் நலனை முன்னிட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.

தீபாவளிக்கு முன்பு இந்த வரிக் குறைப்பு அமலுக்கு வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x