ரூ. 36 கோடி கடனை செலுத்தாத தியேட்டருக்கு சீல்

ரூ. 36 கோடி கடனை செலுத்தாத தியேட்டருக்கு சீல்
Updated on
1 min read

கரூர் வைஸ்யா வங்கியில் வாங்கிய ரூ 36 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் பெங்களூரில் உள்ள வைபவ் திரையரங்கிற்கு, வங்கி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

திரையரங்கத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் பாதியிலே வெளியேற்றப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வைபவ் திரையரங்கத்தின் அதிபர் வி.எஸ்.லாட் கடந்த 2001-ம் ஆண்டு கரூர் வைஸ்யா வங்கியின் சஞ்சய் நகர் கிளையில் திரையரங்கத்தை புதுப்பிக்க ரூ.36 கோடி கடன் பெற்றிருந்தார்.கடந்த 5 ஆண்டுகளாக கடன் மற்றும் வட்டியைச் செலுத்தவில்லை. அதற்குரிய முறையான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகம் கடந்த ஆண்டு பெங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வைபவ் திரையரங்க நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தது.நீதிமன்றத்திலும் வி.எஸ்.லாட் மாற்றும் அவரது மகன்கள் ஆஜராகி முறையான பதில் அளிக்கவில்லை.எனவே பெங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், திரையரங்கத்திற்கு சீல்'வைக்க வங்கிக்கு கடந்த மாதம் அனுமதி அளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in