ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்: கைதான சுலைமான் கானிடம் போலீஸார் விசாரணை

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்: கைதான சுலைமான் கானிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

நாகவுர்: ராஜஸ்​தானின் நாக​வுர் மாவட்​டத்​தில் உள்ள ஒரு பண்ணை வீட்​டில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த சுமார் 10,000 கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடி மருந்தை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

குடியரசு தின விழா பாது​காப்​புப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டிருந்த நிலை​யில், மிகப்​பெரிய அளவில் வெடிமருந்து பறி​முதல் செய்​யப்​பட்​டது ராஜஸ்​தானில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது குறித்து நாக​வுர் மாவட்​டக் காவல் துறை கண்​காணிப்​பாளர் மிருதுல் கச்​சவா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வெடி மருந்துகள் சட்​ட​விரோத​மாக வாங்​கப்​படு​வ​தாக​வும், பெருமளவில் இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

அதனடிப்​படை​யில், மாவட்ட சிறப்​புப் படை ஜனவரி 24ல் ஹர்​சோர் பகு​தி​யில் உள்ள ஒரு பண்ணை வீட்​டில் அதிரடி சோதனை நடத்​தி​யது. அப்​போது அங்கு சட்ட விரோத​மாகப் பதுக்கி வைக்கப்பட்​டிருந்த 10,000 கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் பறிமுதல் செய்யப்​பட்​டது. அத்​துடன் டெட்​டனேட்​டர்​கள், கம்​பிகள் உள்​ளிட்ட சுரங்க வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​படும் இதரப் பொருட்களும் கண்​டெடுக்​கப்​பட்​டன. இது தொடர்​பாக சுலைமான் கான் என்பவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

அவர் மீது வெடிபொருட்​கள் சட்​டம் மற்​றும் திட்​ட​மிடப்​பட்ட குற்​றத் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. முதற்​கட்ட விசா​ரணை​யில், அவர் சட்​டப்​பூர்​வ​மான மற்​றும் சட்டவிரோதச் சுரங்​கங்​களுக்கு இந்த வெடிபொருட்​களை விநியோகம் செய்​தது தெரிய​வந்​துள்​ளது. சுலை​மான் கான் மீது ஏற்​கெனவே வெடிபொருட்​கள் சட்​டத்​தின் கீழ் 3 வழக்​கு​கள் நிலுவை​யில் உள்​ளன. இவ்​வாறு மிருதுல்​ தெரி​வித்​தார்.

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிமருந்து பறிமுதல்: கைதான சுலைமான் கானிடம் போலீஸார் விசாரணை
“அரசியலைவிட்டே போயிடலாம் போல் இருக்கிறது!” - செல்லூர் ராஜு திடீர் விரக்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in