

புதுடெல்லி: டெல்லி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 2021-ம் ஆண்டு முதல் பிடிக்கப்படும் வனவிலங்குகள் அசோலா பாட்டீ சரணாலயத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. இதுவரை அங்கு சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 6,691 குரங்குகளை டெல்லி மாநகராட்சி பிடித்து மறுவாழ்வுக்காக சரணாலயத்தில் ஒப்படைத்தது. குடியிருப்பு பகுதிகளில் பிடிபடும் பாம்புகள், உடும்புகள், பறவைகள் மற்றும் இதர உயிரினங்களை தொண்டு நிறுவனங்கள் இங்கு ஒப்படைக்கின்றன.
2021-ம் ஆண்டுக்கு முன்பு வரை அசோலா பாட்டீ சரணாலயத்தில் 23,263 குரங்குகள் கொண்டுவரப்பட்டன. தற்போது இங்கு குரங்குகளின் மொத்த எண்ணிக்கை 29,854 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டில் அதிகபட்சமாக 804 விலங்குகளை வனத்துறை மீட்டு அசோலா பாட்டீ சரணாலயத்தில் ஒப்படைத்தது.