5 மாநிலங்களில் ஆயிரம் கார்கள் திருட்டு - 10 பேர் கைது; 31 வாகனங்கள் பறிமுதல்

5 மாநிலங்களில் ஆயிரம் கார்கள் திருட்டு - 10 பேர் கைது; 31 வாகனங்கள் பறிமுதல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட 5 மாநிலங்​களில் ஒரு கும்​பல் சுமார் 1,000-க்​கும் மேற்​பட்ட கார்​களை திருடி விற்பனை செய்​துள்​ளது. இதுதொடர்​பாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் இருந்து 31 கார்​கள் பறிமுதல் செய்யப்​பட்டு உள்​ளன.

இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் நேற்று கூறிய​தாவது: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்​தி​யம் (என்​சிஆர்) பகு​தி​களில் கார்கள் அதி​கள​வில் திருடு போயின. குறிப்​பாக டெல்லி ரோகிணி, உத்​தம் நகர் பகு​தி​களில் கார் திருட்டு அதி​கரித்​தது. சிசிடிவி கேமராக்​களை தீவிர​மாக ஆய்வு செய்​து, நீண்ட தேடலுக்குப் பிறகு கார் திருட்​டில் ஈடு​பட்டு வந்த 10 பேர் கும்​பலை பிடித்து உள்ளோம்.

இந்த கும்​பலின் தலை​வ​னாக தாமன் தீப் சிங் என்​பவர் செயல்பட்டு உள்​ளார். இவர் பஞ்​சாபில் பழைய கார்​களை விற்கும் நிறு​வனத்தை நடத்தி வரு​கிறார். சாப்ட்​வேர் இன்​ஜினீயர், இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஆகியோ​ரும் கும்பலில் உள்​ளனர்.

டெல்​லி, ஹரி​யாணா, பஞ்​சாப், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்​களில் சுமார் 1,000-க்​கும் மேற்​பட்ட கார்களை இந்த கும்​பல் திருடி விற்​பனை செய்​திருப்​பது முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. தற்​போது அவர்​களிடம் இருந்து 31 விலை உயர்ந்த கார்​களை பறி​முதல் செய்திருக்கிறோம். இதில் 11 பார்​சூனர், 6 செல்​டோஸ், 6 கிரெட்டா, 3 இன்​னோ​வா, 2 ஸ்கார்​பியோ, தலா ஒரு வென்​யூ, தார், ஸ்விப்ட் கார்​கள் அடங்​கும்.

திருடப்​படும் கார்​களின் சேசிஸ், இன்​ஜின் எண்​களை இந்த கும்பல் மாற்​றி​யிருக்​கிறது. போலி ஆவணங்​கள் மூலம் கார்களுக்கு புதிய பதிவு எண்​களை பெற்​றுள்​ளனர். பழைய கார்கள் விற்​பனையகங்​கள் மூலம் திருட்டு கார்​களை நல்ல விலைக்கு விற்​பனை செய்து பெரும் தொகையை திரட்டி உள்ளனர். அவர​வர் பங்​களிப்​புக்கு ஏற்ப பணம் பகிர்ந்து அளிக்கப்​பட்டு உள்​ளது.

இந்த கும்​பலால் விற்​பனை செய்​யப்​பட்ட 1,000 கார்​களின் விவரங்களை சேகரித்து வரு​கிறோம். திருட்டு கும்​பலோடு தொடர்​புடைய​வர்​கள் குறித்​தும் தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது. இவ்​வாறு டெல்​லி போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

5 மாநிலங்களில் ஆயிரம் கார்கள் திருட்டு - 10 பேர் கைது; 31 வாகனங்கள் பறிமுதல்
உத்தர பிரதேசத்தில் அரசு உதவி பெறும் மதரஸாவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவில் முறைகேடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in