இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடரும் 10 கோடி பேர்!

உலகத் தலைவர்களில் சாதனை படைத்தார்
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடரும் 10 கோடி பேர்!
Updated on
1 min read

புதுடெல்லி: இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்திர மோடியை 10 கோடி பேர் பின் ​தொடர்​கின்​றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நவம்​பர் 12-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி இன்​ஸ்​டாகி​ராமில் இணைந்​தார். அவர் இணைந்த சில மணி நேரங்​களில் 50,000 பேர் அவரை பின்​ தொடர்ந்​தனர். கடந்த 2018ம் ஆண்​டில் இன்​ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடியை பின்​ தொடர்​வோர் எண்​ணிக்கை ஒரு கோடி​யாக உயர்ந்​தது.

கடந்த 2020-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 4 கோடி​யாக அதி​கரித்​தது. கடந்த 2022ம் ஆண்​டில் 7 கோடி பேர், 2023ம் ஆண்​டில் 8 கோடி பேர், 2024ம் ஆண்​டில் 9 கோடி பேர், 2025ம் ஆண்​டில் 9.5 கோடி பேர் என பின்​ தொடர்​வோரின் எண்​ணிக்கை படிப்​படி​யாக உயர்ந்​தது.

தற்​போது இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்திர மோடியை பின்​தொடர்​வோரின் எண்​ணிக்கை 10 கோடியை தாண்டி உள்​ளது. இதன்​ மூலம் இன்​ஸ்​டாகி​ராமில் அதிக பின்​தொடர்​வோரை கொண்ட உலகத் தலை​வ​ராக பிரதமர் நரேந்​திர மோடி உரு​வெடுத்​துள்​ளார். இதன் ​மூலம் அவர் புதிய சாதனையை படைத்​திருக்​கிறார்.

இன்​ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடிக்கு அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை 4.32 கோடி பேர் பின்​ தொடர்​கின்​றனர். இந்தோ​னேசிய அதிபர் பிர​போவா சிபி​யாண்​டோவை 1.5 கோடி பேரும், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுாலா டா சில்வாவை 1.44 கோடி பேரும், துருக்கி அதிபர் எர்​டோகனை 1.16 கோடி பேரும், அர்​ஜென்​டினா அதிபர் ஜேவியர் மிலேவை 64 லட்சம் பேரும் பின் ​தொடர்​கின்​றனர்.

இந்​திய அளவி​லான இன்​ஸ்​டாகி​ராமில் பிரதமர் மோடிக்​கும் இதர தலை​வர்​களுக்​கும் இடையி​லான இடைவெளி மிக, மிக அதி​க​மாக உள்​ளது.

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடரும் 10 கோடி பேர்!
விமான டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறும் விதிகள் மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in