

போபால்: மத்திய பிரதேசத்தில் 92,071 அரசு பள்ளிகள் உள்ளன. 3.93 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) ஆசிரியர்கள் ஈடுபடுவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கல் எழுந்துள்ளது.
அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள கேதா மாதோபூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 55 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் இரு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதில் ஓர் ஆசிரியர் எஸ்ஐஆர் பணிக்காக சென்றுவிட்டார். தற்போது பாரத்குமார் ஜாதவ் என்ற ஆசிரியர் மட்டும் பள்ளியை நடத்தி வருகிறார்.