குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்: அச்சன்புதூர் அருகே பொதுமக்கள் அச்சம்

அச்சன்புதூர் அருகே உள்ள குளத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.

அச்சன்புதூர் அருகே உள்ள குளத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.

Updated on
1 min read

தென்காசி: தென்​காசி மாவட்​டம் அச்​சன்​புதூர் அருகே குடி​யிருப்பு பகு​தி​யில் காட்டு யானை​கள் புகுந்​துள்​ள​தால் பொது​மக்​கள் அச்​சத்​தில் உள்​ளனர்.

தென்​காசி மாவட்​டத்​தில் மேற்​குத் தொடர்ச்சி மலை​யையொட்​டிய பகு​தி​களில் உள்ள விவ​சாய நிலங்​களில் காட்டு யானை​கள் அடிக்​கடி புகுந்து பயிர்​களை சேதப்​படுத்தி வரு​கின்​றன. இதனால் விவ​சா​யிகள் கடும் இழப்​பு​களை சந்​தித்து வரு​கின்​றனர். மேலும், குடி​யிருப்பு பகு​தி​களுக்கு அரு​கிலும் யானை​கள் அவ்​வப்​போது வரு​வ​தால் பொது​மக்​கள் அச்​சத்​தில் உள்​ளனர்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு அச்​சன் ​புதூர் அருகே உள்ள நெடு​வயல் பகு​தி​யில் குடி​யிருப்​பு​களுக்கு அருகே உள்ள தென்​னந்​தோப்​பில் 2 காட்டு யானை​கள் புகுந்​துள்​ளன. நேற்று காலை​ இதை பார்த்த விவ​சா​யிகள் அச்​சம் அடைந்​தனர். இதுகுறித்து வனத்​துறை​யினருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

வனத்​துறை​யினர், வரு​வாய்த் துறை​யினர் மற்​றும் காவல்​துறை​யினர் விரைந்து சென்​று, கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். பகல் நேரத்​தில் யானை​களை வனப்​பகு​திக்​குள் விரட்​டி​னால் குடி​யிருப்​பு​களுக்​குள் புகுந்​து​விடும் அபா​யம் நில​வியது. இந்​நிலை​யில், நேற்று பகலில் யானை​ கள் அரு​கில் உள்ள குளத்​தில் தஞ்​சமடைந்​தன.

அவை அங்​கிருந்து வெளி​யேறாத​வாறு கண்​காணிப்பு பணி​யில் வனத்​துறை​யினர் ஈடு​பட்​டனர். இரவு நேரத்​தில் யானை​களை பாது​காப்​பாக வனப்​பகு​திக்​குள் அனுப்ப நடவடிக்கை எடுத்​துள்​ளனர். அப்​பகு​தி​யில் மின் இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டது. மேலும், அச்​சன்​புதூர்​–தென்​காசி சாலை​யில் போக்​கு​வரத்​துக்​கும் தற்​காலிக​மாக தடை விதிக்​கப்​பட்​டது. அச்​சன்​புதூர் அரசுப் பள்​ளிக்கு நேற்று விடு​முறை அளிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>அச்சன்புதூர் அருகே உள்ள குளத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள். </p></div>
வெற்றி நோட்புக் முதல் வெற்றி உப்பு வரை: தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட 23 அறிவிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in