திருப்பதியில் மின்சார வேலியில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு

திருப்பதியில் மின்சார வேலியில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பதி: ​திருப்​பதி அருகே மின்​சார வேலி​யில் சிக்கி 2 யானைகள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தன.

திருப்​ப​தியை அடுத்​துள்ள பாக​ராப்​பேட்டை வனப்​பகு​தி​யில் யானை​கள் அதி​க​மாக உள்​ளன. இந்த வனப் பகு​தியை ஒட்டி அமைந்​துள்ள சாய்​பாலபல்லி எனும் கிராமத்​தில் ஷேக் அக்​தர், ஷேக் சமீர் ஆகியோர் வேர்க்​கடலை பயி​ரிட்​டுள்​ளனர்.

வேர்க் ​கடலை பயிரை காட்​டுப் பன்​றிகள் சேதப்​படுத்​து​வதை தடுக்க இவர்​கள் சட்​ட​விரோத​மாக மின்​சார வேலி அமைத்துள்ளனர். இந்​நிலை​யில் இந்த வேலி​யில் நேற்று முன்தினம் இரவு 2 யானை​கள் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தன.

தகவலின் பேரில் திருப்​பதி மாவட்ட வனத்​துறை அதி​காரி சாய்​பாபா மற்​றும் பிற அதி​காரி​கள் சம்பவ இடத்​திற்கு சென்று பார்வை​யிட்​டனர். ஷேக் அக்​தர், ஷேக் சமீர் ஆகிய இரு​வர் மீதும் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

திருப்பதியில் மின்சார வேலியில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு
உலகளவில் ஆயுத இறக்குமதி இந்தியாவுக்கு 2-ம் இடம்: சிப்ரி அறிக்கையில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in