லட்சக்கணக்கான சாளை மீன்கள் மணப்பாடில் உயிரோடு கரை ஒதுங்கின

லட்சக்கணக்கான சாளை மீன்கள் மணப்பாடில் உயிரோடு கரை ஒதுங்கின
Updated on: 
1 min read

தூத்துக்குடி: மணப்பாடு கடற்கரையில் நேற்று மாலை லட்சக்கணக் கான சாளை மீன்கள் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள கடற்கரை கிராமம் மணப்பாடு.

இப்பகுதி மக்கள் மீன்பிடி தொழிலைச் சார்ந்தே வாழ் கின்றனர். மணப்பாடு கடலில் கிடைக்கும் சாளை மீனுக்கு கடும் கிராக்கி உண்டு.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தின் காரணமாக, மணப்பாட்டில் மணல் திட்டுகள் பல உருவாகி, மீனவர்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

அருகிலுள்ள குலசேகரன் பட்டினத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்படி இப்பகுதி கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மணப்பாடு சவேரியார் கோயில் பகுதியில், லட்சக்கணக்கான சாளை மீன்கள் திடீரென கரை ஒதுங்கின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இதைக்காண ஏராளமானவர்கள் கடற்கரையில் குவிந்தனர்.

<div class="paragraphs"><p>மணப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய சாளை மீன்கள்.</p></div>

மணப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய சாளை மீன்கள்.

அதிகாரிகள் ஆய்வு

ஒரே நாளில் லட்சக்கணக் கான சாளை மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியது மீனவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரண மாக இந்த மீன்கள் கரை ஒதுங்கி யிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கான சாளை மீன்கள் மணப்பாடில் உயிரோடு கரை ஒதுங்கின
இம்ரான் கானுக்கு கண் சிகிச்சை

X