கோவை குளங்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

கோவை: கோவை குளங்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறி யப்பட்டுள்ளது. ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ என்பவை 5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும்.

வீட்டுக் குடிநீர் இணைப்பு தொடங்கி, கட்டுமானம், பாலியெஸ்டர், நைலான், எலெக்ட்ரிக் பொருட்கள் என பலவற்றிலும் பிளாஸ்டிக் கோலோச்சுகிறது. பிளாஸ்டிக் விலை குறைவாக இருப்பதால், அனைத்து மட்டத்திலும் பயன் படுத்தப்படுகிறது.

ஒரு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் அழிய, சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுவது, எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது.

சூரிய ஒளி மற்றும் பிற காரணிகளால் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் பரவலாகி வருகிறது. ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தனியார் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.ராஜா கூறும்போது, “மைக்ரோ பிளாஸ்டிக் காற்று மற்றும் நீரில் இருப்பதால், நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குளங்களில் வாழும் மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு மைக்ரோ பிளாஸ்டிக்கால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. மைக்ரோ பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப் படுகின்றன. குடிநீர் தண்ணீர், தேன், சர்க்கரை, உப்பு என பலவற்றிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள் ளது” என்றார்.

கல்லூரியின் ஆராய்ச்சி மாணவர் எப்சி கே.டேவிஸ் கூறும்போது, “கோவை குமாரசாமி குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சிக்குளம், சிங்காநல்லூர் குளம் மற்றும் சூலூர் குளம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்தபோது, மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை அறிந்தோம். அதாவது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், நேரடியாக நீர்நிலைகளில் குப்பையை கொட்டுவது உள்ளிட்ட காரணங்களால் நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.

இதனால் நீர்நிலைகளின் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுகிறது. குளத்தின் மண் மாதிரிகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை எரிக்கும்போது, காற்றில் கலக்கும் நெடியால் அதனை சுவாசிக்கும் மனிதர் களுக்கு பல்வேறு நோய் பாதிப் புகள் ஏற்படுகின்றன.

நாம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் 16 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்கிறோம். எஞ்சியவை பூமிக்கு தீங்காக மாறுகின்றன. மைக்ரோ பிளாஸ்டிக்கால் குளங்களில் உள்ள நுண் தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் இதனை நம்பி உள்ள மற்ற உயிர்களும் பாதிப்படைகின்றன.

குளத்தின் பல்லுயிர் பெருக்கம் மட்டுமின்றி அதனை உணவாக உட்கொள்ளும் மனித சமூகமும் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மைக்ரோ பிளாஸ்டிக்கின் ஆபத்தை உணர்ந்து, பிளாஸ்டிக்கை முறையாக கையாள்வது நமது கடமை. ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீனை அன்றாட வாழ்வில் தவிர்ப்பது அவசிய மான ஒன்று” என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ரத்தக் குழாய் வெடித்த இளைஞருக்கு மறுவாழ்வு: ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in