சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு உயர்வு

வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், கடல் போல் காட்சியளிக்கும் புழல் ஏரி. | படம்: இரா.நாகராஜன் |

வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், கடல் போல் காட்சியளிக்கும் புழல் ஏரி. | படம்: இரா.நாகராஜன் |

Updated on: 
1 min read

திருவள்ளூர்: வடகிழக்கு பரு​வ​மழையால் நீர்ப்​பி​டிப்பு பகுதி​களில் இருந்து தொடர்ந்து நீர்​வரத்து இருப்​ப​தால், புழல் உள்​ளிட்ட சென்​னைக் குடிநீர் ஏரி​களில் நீர் இருப்பு அதி​கரித்து வரு​கிறது.

வடகிழக்கு பரு​வ​மழையின் காரண​மாக திரு​வள்​ளூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் உள்ள சென்​னைக்கு குடிநீர் தரும் முக்​கிய ஏரி​களான பூண்டி, புழல், சோழவரம், கண்​ணன்​கோட்டை -தேர்​வாய் கண்​டிகை மற்​றும் செம்​பரம்​பாக்​கம் ஏரி​களுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்​டிருக்​கிறது.

நேற்று காலை நில​வரப்​படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,126 கன அடி, பூண்டி ஏரிக்கு 520 கன அடி, செம்​பரம்​பாக்​கம் ஏரிக்கு 385 கன அடி, கண்​ணன்​கோட்டை தேர்​வாய் கண்​டிகை ஏரிக்கு 65 கன அடி, சோழவரம் ஏரிக்கு 55 கன அடி நீர் வந்​து ​கொண்​டிருக்​கிறது. இத​னால் இந்த ஏரி​களின் நீர் இருப்பு அதி​கரித்து வரு​கிறது.

3,300 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட புழல் ஏரி​யில் நேற்று காலை நில​வரப்​படி 2,248 மில்​லியன் கன அடி, 3,645 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட செம்​பரம்​பாக்​கம் ஏரி​யில் 1,435 மில்​லியன் கன அடி என நீர் இருப்பு உள்​ளது.

3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட பூண்டி ஏரி​யில் 468 மில்​லியன் கன அடி, 500 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட கண்​ணன்​கோட்டை- தேர்​வாய் கண்​டிகை ஏரி​யில் 236 மில்​லியன் கன அடி, 1,081 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட சோழவரம் ஏரி​யில் 138 மில்​லியன் கன அடி என, நீர் இருப்பு உள்​ளது.

<div class="paragraphs"><p>வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், கடல் போல் காட்சியளிக்கும் புழல் ஏரி. | படம்: இரா.நாகராஜன் |</p></div>
நாதக நிர்வாகிகள் கைதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அக்.24-ல் ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in