செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 இடங்களில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு

84 வகை பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அஞ்சூர் ஏரி மற்றும் மறைமலைநகர் பகுதி ஏரிகளில் உள்ள பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள புகைப்பட கலைஞர்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அஞ்சூர் ஏரி மற்றும் மறைமலைநகர் பகுதி ஏரிகளில் உள்ள பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள புகைப்பட கலைஞர்கள்.

Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில், வனத்​துறை சார்​பில், சுமார் 22 இடங்​களில் நீர், நில பறவைகள் குறித்த கணக்​கெடுப்பு பணி கடந்த 2 நாட்​களாக நடை​பெற்​றது. இதில், 84 வகை​யான பறவை இனங்​களும், 1,000-க்​கும் மேற்​பட்ட பறவை​களும் அடை​யாளம் காணப்​பட்​டது.

பறவைகள், சுற்​றுச்​சூழலை பாது​காப்​ப​தில் முக்​கிய பங்கு வகிக்​கும் உயி​ரின​மாகும். எனவே, பறவை இனத்​தை​யும், அவற்​றின் வாழ்​விடங்​களை​யும் பாது​காக்க, தமிழக அரசு மாநிலம் முழு​வதும், 2,000-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் (ஈர நிலங்​கள் மற்​றும் நிலப்​பகு​தி​கள்) மிகப்​பெரிய அளவில் ஒருங்​கிணைந்த பறவைகள் கணக்​கெடுப்பை 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வரு​கிறது.

அதன்படி, வனத்​துறை சார்​பில், இந்த ஆண்டுக்கான ஒருங்​கிணைந்த பறவைகள் கணக்​கெடுப்பு டிச. 27, 28 ஆகிய 2 நாள்​கள் நடை​பெற்​றன. செங்​கல்​பட்டு மாவட்​டத்தில், 22 இடங்​களில் நீர், நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடை​பெற்றது.

இதில் வனத்​துறை​யினர் தன்​னார்வ அமைப்​பினர், கல்​லூரி மாணவர்​கள், தொழில்​முறை புகைப்பட கலைஞர்​கள் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர். திருப்​போரூர், செங்​கல்​பட்​டு, மது​ராந்​தகம், செய்​யூர் உள்​ளிட்ட, 22 ஈர நில பகு​தி​களில் பறவைகள் கணக்​கெடுப்பு மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதில், 84 வகை​யான பறவை இனங்​களும், 1,000-க்​கும் மேற்​பட்ட பறவை​களும் அடை​யாளம் காணப்​பட்​டது. 2-ம் கட்​ட​மாக நிலப்​பரப்​பு​களில் கணக்​கெடுப்பு செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என, வனத்​துறை​யினர் தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அஞ்சூர் ஏரி மற்றும் மறைமலைநகர் பகுதி ஏரிகளில் உள்ள பறவைகள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள புகைப்பட கலைஞர்கள்.</p></div>
ஜவுளிக்கடை சென்றபோது இளம் பெண் தவறவிட்ட தாலி செயினை தேடிக் கொடுத்த போலீஸார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in