குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

தென்காசி: குற்​றாலம் காப்​புக்​காடு அரு​கில், மலை​யடி​வார பகு​தியில் ஆண் குட்டி யானை தாயை பிரிந்த நிலை​யில் சுற்​றித் திரிந்​தது. இதுகுறித்து தகவல் அறிந்​த வனத்துறையினர் மற்றும் கால்​நடை மருத்து​வர்​ குழுவினர் அப்​பகு​திக்குச் சென்​றனர். சோர்வுடன் காணப்​பட்ட யானைக்குட்​டிக்கு சிகிச்சை அளித்து, உடல்​நிலையை ஆய்வு செய்​தனர்.

குட்டி யானையை, அதன் தாயுடன் சேர்க்க வனத்​துறை​யினர் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர். குட்​டியை பிரிந்த யானைக் கூட்​டம் அப்​பகு​தி​யில் சுற்​றித் திரிவ​தால் வனப்​பகுதிக்கு அரு​கில் பொது​மக்​கள் யாரும் செல்ல வேண்​டாம் என வனத்​துறை​யினர் அறி​வுறுத்தி உள்​ளனர். வனத்​துறை சார்​பில் 2 குழுக்​கள் அமைக்கப்பட்டு குட்டி யானையை தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். மேலும், அதனை, தாய் யானை​யுடன் சேர்க்​கும் பணி​யிலும் அவர்கள் ஈடு​பட்​டு வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in