தமிழகத்தில் தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பு

தமிழகத்தில் தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியன்று காற்று மாசு அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டைக் கண்டறிய நவ.8-ம் தேதி காலை 6 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் காற்று மாசு 39 இடங்களிலும், ஒலி மாசு 34 இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, சென்னையில் காற்றுத் தர குறியீட்டு (AQI) அளவு குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 183, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 343 என கண்டறியப்பட்டது.

தமிழகம் முழுவதும் முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு சராசரி மாசு அதிகரித்துள்ளது. 25 மையங்களில் காற்று தரக் குறியீடு அளவு அதிகரித்தும், 14 மையங்களில் குறைந்தும் பதிவாகியுள்ளது. சென்னையில் வளசரவாக்கம் (343), நுங்கம்பாக்கம் (332), சவுகார்பேட்டை (311), தியாகராய நகர் (306) ஆகிய பகுதிகளில் காற்றின் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் பதிவாகியுள்ளது.

அதேபோல, திருவொற்றியூரில் 77.4 டெசிபல், அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 88.6 டெசிபல் என ஒலி மாசு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 75.70 டெசிபலாக இருந்த ஒலி மாசு சராசரி இந்த ஆண்டு 76.73 ஆக அதிகரித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பு
தூய்மைப் பணியாளர்கள் போனஸ் கேட்டு போராட்டம்: புதுச்சேரி நகர் முழுவதும் தேங்கிய குப்பைகள்

X