கோம்புபள்ளத்தில் சாயக்கழிவு கலப்பு: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் நீலநிறத்தில் சென்ற சாயக் கழிவுநீர்.
குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் நீலநிறத்தில் சென்ற சாயக் கழிவுநீர்.
Updated on
1 min read

நாமக்கல்: குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் சென்ற சாயக் கழிவுநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர்.

குமாரபாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மட்டுமே வெளியேற்றம் வேண்டும், என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் உத்தரவிட்டுள்ளனர். எனினும், சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீர் காவிரியில் நேரடியாக வெளியேற்றப்படுகிறது.

இதனால் மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது, என மக்கள் புகார் எழுப்புகின்றனர். அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். எனினும், ஆற்றில் சாயக்கழிவு கலப்பது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே செல்லும் கோம்பு பள்ள கால்வாயில் கழிவுநீருடன் சாயக் கழிவும் சென்றது.

அது நீலநிறமாக இருந்ததுடன் நேரடியாக காவிரியிலும் கலப் பதால் பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், சுத்திகரிக்கப் படாத சாயக் கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவு நீரை வெளியேற்றும் சாயப் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in