உயிரினம் வாழும் சாத்தியங்களுடன் பூமி அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட எல்பி 791-18 கிரகம். படம்: பிடிஐ
சூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட எல்பி 791-18 கிரகம். படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: சூரிய மண்டலத்துக்கு வெளியேயுள்ள தென்பகுதி விண்மீன் தொகுப்பில் 90 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு கிரகம், சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருப்பதை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்மித்னோனியன் நிறுவனத்தின் வான் இயற்பியல் மைய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு எல்பி 791-18 என பெயரிடப்பட்டுள்ளது.

நாசாவின் ‘டெஸ்’ என்ற ஆய்வு செயற்கைக்கோள் மூலம் இந்த கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி ‘நேச்சர்’ என்ற இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது: எல்பி 791-18 கிரகம் பூமியைவிட சற்று பெரிதாக உள்ளது. நட்சத்திரத்தை நோக்கியுள்ள இந்த கிரகத்தின் பகுதி அதிக வெப்பமுடையதாக இருக்கலாம்.

அந்த கிரகம் முழுவதும், குழம்புகளை வெளியேற்றும் எரிமலைகள் இருப்பது போல் தெரிகிறது. இந்த கிரகத்தின் மறு பக்கத்தில் தண்ணீர் இருக்கலாம். இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்களும் இருக்கலாம். வியாழன் கிரகம் மற்றும் அதன் நிலவுகளிலும் இதே போன்ற அமைப்புகள் உள்ளன. புவியியல் அடிப்படையில் இந்த கிரகம் இருந்தால், இதில் வளிமண்டலமும் இருக்கலாம்.

இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in