

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த நுரை நீரில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்குக் கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், நீரில் ரசாயனம் கலந்த கரும்பச்சை நிறத்தில் தண்ணீர் துர்நாற்றத்துடன் நுரையுடன் பொங்கி வழிகிறது. இந்த நுரை காற்றில் பறந்து அருகே உள்ள விளை நிலங்களில் ஆங்காங்கே தேங்கியுள்ளன.
இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் ஆற்றங்கரையோரம் தேங்கி நிற்கும் நுரையை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி வருகின்றனர். மேலும், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நுரை பொங்கும் நீரை வேடிக்கை பார்க்கத் திரண்டு வருகின்றனர். பலர் செல்போனில் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.