

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவு நேரத்தில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் பூத்துள்ளன. ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளதால், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர், தனது வீட்டில் ‘நிஷாகந்தி’ என அழைக்கப்படும் பிரம்ம கமலம் மலர் செடியை வளர்த்து வருகிறார். இதிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
ஒரே செடியில் 15-க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்துள்ளது, அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பூக்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். பல வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்தாலும், தற்போது பந்தலூரில் வெள்ளை நிறத்தில் பூத்துள்ளது.