ரூ.20 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு மையம்: அரசின் புதிய அறிவிப்புகள்

புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மதிவேந்தன்
புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மதிவேந்தன்
Updated on
1 min read

சென்னை: ரூ.20 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு மையம் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.13) வனத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.மதிவேந்தன் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:

  • ரூ.20 கோடியில் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.
  • ரூ.15 கோடியில் தாஞ்சாவூர் மாவட்டம், மனோராவில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.
  • ரூ.20 கோடியில் சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.
  • உலக புகழ் பெற்ற ராம்சார் தளமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ரூ.9.3 கோடியில் இயற்கை சூழலில் மெருகூட்டப்படும்.
  • ரூ.6 கோடியில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள கூந்தகுளம் பறவைகள் சரணாலயம் ஒருங்கிணைந்த சூழலில் மேம்படுத்தப்படும்.
  • ரூ.3.7 கோடியில் பழவேற்காடு பறவைகள் சரணாலயலத்தின் சூழல் சுற்றுலாத் திறன் மேம்படுத்தப்படும்.
  • அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணலாயம் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in