நீலகிரி வனக்கோட்டத்தில் 120 வகை பறவைகள்

நீலகிரி வனக்கோட்டத்தில் 120 வகை பறவைகள்
Updated on
1 min read

உதகை: நீலகிரி வனக்கோட்டத்தில் 120 வகையான பறவைகள் இருப்பதுகணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீர்ப்பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் என 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி மாதம்28, 29-ம் தேதிகளில் நடந்தது. இதில் 35 வகையான பறவை இனங்கள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து நடைபெற்றநிலப்பறவைகளின் கணக்கெடுப்பில் நீலகிரி மாவட்டத்தில் அரிய வகை பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி வனக்கோட்ட அதிகாரி கவுதம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 5 இடங்களும், வனம் சார்ந்த பகுதிகளில் 15 இடங்களும் என 20 இடங்கள் பறவைகள் கணக்கெடுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் அரசுகலைக் கல்லூரியில் வனவிலங்குஉயிரியல் துறை மாணவ, மாணவிகள் 40 பேர், 25 வனஊழியர்கள் கலந்துகொண்டனர். கணக்கெடுப்பில் 120 வகைகளில் பறவைகள் இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக கெத்தை பகுதியில் சுமார் 36, அவலாஞ்சியில் 32, முக்கூர்த்தி பிஷ்ஷிங் ஹட் பகுதியில் 38 வகை பறவைகளை கண்டறிந்துள்ளோம், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in