நிலத்தில் மட்டுமல்ல கடலுக்கு அடியிலும் தகதகக்கும் வெப்பம்: விஞ்ஞானிகள் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வெப்ப அலை பூமியின் மேற்பரப்பான நிலத்தில் மட்டுமல்லாது கடலுக்கு அடியிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது கடல் வாழ் உயிரின சூழலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்விதழில் இந்த ஆய்வு குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடலின் அடிப்பகுதியில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை அறிந்து கொள்ளும் முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதுதான் கடலுக்கு அடியில் நிலவும் வெப்ப அலை என அறியப்படுகிறது. ஆழத்தை பொறுத்து கடலின் வெப்பநிலை மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் நிலவும் வெப்பத்தை அறிய விஞ்ஞானிகள் பல ஆண்டு காலமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடலில் நிலவும் வெப்ப சூழலால் கடல் வாழ் உயிரினங்களில் சிறிய உயிரினம் என சொல்லபடும் பிளாங்க்டன் துவங்கி பெரிய உயிரினமான திமிங்கலங்கம் வரை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதலின் காரணமாக ஏற்படும் வெப்பத்தில் 90 சதவீதத்திறக்கும் அதிகப்படியான வெப்பத்தை கடல் உறிஞ்சிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கடலில் வெப்ப அலைகள் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடலின் மேற்பரப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வெப்பநிலை கடலின் அடிப்பகுதியில் அதிகம் நிலவுகின்ற காரணத்தால் அதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in