மஞ்சள் மூக்கு நாரை வாழ்விடமான ஓசூர் - வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்

ஓசூர் கொத்தகொண்டப்பள்ளியில் வனத்துறையினர் கணக் கெடுப்பில் கண்டறியப்பட்ட மஞ்சள் மூக்கு நாரைகள்.
ஓசூர் கொத்தகொண்டப்பள்ளியில் வனத்துறையினர் கணக் கெடுப்பில் கண்டறியப்பட்ட மஞ்சள் மூக்கு நாரைகள்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் ஈர நிலப்பகுதியில் மஞ்சள் மூக்கு நாரைகள் கூடுகட்டி வாழ்வது வனத்துறையினர் கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

வனத்துறை சார்பில் ஓசூர் வனப்பிரிவில் அண்மையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. வனத்துறையினருடன் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து 15 நீர்நிலைகளில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில்,100-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருப்பது கண்டறியப்பட்டன.

மேலும், இக்கணக்கெடுப்பில் ஓசூர் அருகேயுள்ள கொத்தகொண்டபள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மஞ்சள் மூக்கு நாரைகள் கூடு கட்டி வாழ்வது தெரிய வந்தது.

மேலும், கடந்த 22 ஆண்டுகளாக மஞ்சள் மூக்கு நாரைகளுக்கு இப்பகுதி இனப்பெருக்க பிரதேசமாக இருப்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து, மஞ்சள் மூக்கு நாரையைக் காண தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல் கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in