

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 75 டன் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டயப்பர் கழிவுகள் பொதுமக்களிடம் இருந்து தனியாக பெறப்பட்டு, எரியூட்டும் நிலையங்கள் மூலமாக எரித்து அழிக்கப்பட்டன.
சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அவ்வாறு கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை சேகரிக்கப்பட்ட 75 டன் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளன.