கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டோர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டோர்.
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு நடப்பாண்டு வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் பறவைகள் வந்துள்ளன.

இந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இப்பணி 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து 12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 2 நாள் கணக்கெடுக்கும் பணி முடிவுற்றதும், நடப்பாண்டு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்த பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என வனத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in