மஞ்சூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மஞ்சூர்: மஞ்சூர் அருகே மேல்குந்தா, தாய்சோலை இடையே புலிசோலை வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை,கரடி, யானை, காட்டெருமை, மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சிறுத்தைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டன. இது குறித்து வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சாலையில் இறந்து கிடந்த சிறுத்தையை மீட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதுமலைபுலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், கீழ் குந்தா அரசு உதவி கால்நடை மருத்துவர் மோகன்குமார் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இது குறித்து வனச்சரகர் சீனிவாசன் கூறும் போது, ‘‘சிறுத்தை சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயம்ஏற்பட்டதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in