Published : 17 Nov 2022 04:29 PM
Last Updated : 17 Nov 2022 04:29 PM

தமிழகத்தில் 10 கிராமங்களை ‘காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள்’ ஆக மாற்ற அரசு புதிய திட்டம்

காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு

சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 10 கிராமங்களை தேர்வு செய்து ‘காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள்’ (Climate Smart Villages) ஆக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிட்யூட் (world resources institute), ஆரோவில்லே கன்சல்டிங் (auroville consulting), சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் (Citizen Consumer and Civic Action Group) ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தமிழ்நாடு மின்துறை: வளங்குன்றா வளர்ச்சி பாதைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் திட்டங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விக்ரம் கபூர், "தமிழக அரசின் திருத்தப்பட்ட மின்சார வாகனக் கொள்கை விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, "தமிழ்நாடு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கீழ்நிலையில் இருந்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. பசுமை பரப்பளவை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், 100-க்கு மேற்பட்ட சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 13 சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 சதுப்பு நிலங்களை ராம்சர் நிலங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் 10 கிராமங்களை தேர்வு காலநிலை ஸ்மார்ட் கிராமங்களாக (Climate Smart Villages ) மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்படவுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x