பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிய வனத்துறையினர்

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிய வனத்துறையினர்
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகள் அதிக அளவில் வருகின்றன. அவை இனப்பெருக்கம் முடிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தங்களின் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும்.

அதேபோல், இந்த ஆண்டும் வேட்டங்குடி சரணாலயத்தில் பல ஆயிரம் பறவைகள் குவிந்துள்ளன. இந்நிலையில் இங்கு வரும் பறவைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுக்குடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில்லை.

வெடி இல்லாத தீபாவளியை கொண்டாடிவரும் இரு கிராமங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா முயற்சியால் வனத்துறை சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சதாசிவம், வனவர்கள் திருப்பதி ராஜன், உதயகுமார், பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in