Published : 05 Sep 2022 01:30 PM
Last Updated : 05 Sep 2022 01:30 PM

காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்கள்: ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

மின்சார வாகனங்கள் | கோப்புப்படம்

சென்னை: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என நுகர்வோர் விரும்புவதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.

Sustainable Mobility Network மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக் குழு அண்மையில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இக்கணக்கெடுப்பின் முடிவானது, காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாற்றவேண்டும் என்கின்ற கோரிக்கை சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

மேலும் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கேட்பில் சென்னையில் மட்டும் 1508 நபர்களிடம் விநியோக நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கு மாறும் திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

  • டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 78 சதவீத நுகர்வோர் டெலிவரி வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன என்பதை உணர்ந்துள்ளனர்.
  • சென்னை, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூரு முழுவதும் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகள் சார்ந்த 9048 நுகர்வோரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • சென்னையில் உள்ள 86 சதவீத நுகர்வோர், டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின் வாகனங்களுக்கு மாறுவது, பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகின்றனர்.
  • சென்னையில் உள்ள 89 சதவீதம் நுகர்வோர் இ-காமர்ஸ், உணவு, மளிகைப் பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களுக்கு காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது" என நம்புகிறார்கள்.
  • 80 சதவீதம் சென்னையில் உள்ள நுகர்வோர் கடைசி மைல் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிப்பதாக உணர்கின்றனர்.
  • சென்னையில் உள்ள 8 சதவீத நுகர்வோர் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி டெலிவரி எடுக்க முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கின்றனர்.
  • சென்னையில் உள்ள 70 சதவீத டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என நினைக்கின்றனர்.

  • 78 சதவீத டெல்லிவாசிகள், டெல்லி அரசு தனது வரைவு ஒப்பந்தத்தில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர்.
  • 65 சதவீத மும்பை மக்களும் 78 சதவீத புனே மக்களும், மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அதன் மின்வாகன கொள்கையில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகின்றனர்.
  • 64 சதவீத நுகர்வோர், டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை மின்சார வாகனங்களுக்கு மாற்றும் செயலில் ஈடுபட வேண்டும் என நினைக்கின்றனர்.
  • 12 சதவீத நுகர்வோர் மட்டுமே விநியோக நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி பொருட்கள் விநியோகிக்கும் முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கின்றனர்.

  • 93 சதவீத நுகர்வோர் கடைசி மைல் டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால், பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகின்றனர்.
  • டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை முழுவதும் உள்ள 67 சதவீத நுகர்வோர்கள் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது என நம்புகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x