கார்பன் இல்லா உலகம் சாத்தியப்படுமா? - ஒரு விரைவுப் பார்வை

கார்பன் இல்லா உலகம் சாத்தியப்படுமா? - ஒரு விரைவுப் பார்வை
Updated on
1 min read

பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவும், உறிஞ்சப்படும் கார்பனின் அளவும் சமநிலையில் இருப்பதே கார்பன் சமநிலை (கார்பன் நியூட்ரல்) எனப்படுகிறது. தற்போதைய நிலையில் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மீனங்காடி பஞ்சாயத்து கார்பன் சமநிலை அடைந்து வெற்றிபெற்றிருப்பது முக்கியமான ஒன்று.

மீனங்காடி பஞ்சாயத்தில் Tree Banking திட்டத்தின்படி பெருமளவில் மரங்கள் நடப்படும். ஒவ்வொரு மரத்தின் மீதும் கிராமப் பஞ்சாயத்துக்கு உரிமை உண்டு. தனி மனிதர்களுக்குச் சொந்தமான நிலத்திலும் மரங்கள் வளர்க்கப் பஞ்சாயத்து உதவும்.

அத்துடன் இயற்கை வேளாண்மை, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ விழிப்புணர்வு, அறிவியல்ரீதியாகக் கழிவு மேலாண்மை, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி, நீர்நிலைப்பாதுகாப்பு போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கேரள அரசு கார்பன் சமநிலைத் திட்டத்துக்காக 2016 இல் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. அதை வைத்து மீனங்காடி பஞ்சாயத்து சாதித்தது. இன்று மத்திய அரசின் பஞ்சாயத்து அமைச்சகம், கார்பன் இல்லா மீனங்காடி பஞ்சாயத்தின் செயல்பாடுகளை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த ஆலோசித்துவருகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் கேரளத்தில் ஒரு சதவீதத்துக்கும் கீழேதான். உணவுப் பாதுகாப்பிலும் கேரள அரசே வழிகாட்டுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் பருவநிலை மாற்ற சட்டக அமைப்பின் வலியுறுத்தலின்படி, வளரும் நாடுகளுக்கு உறுதுணை செய்யும் பருவநிலை மாற்ற நிதியாக ரூ.100 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்கப் பணக்கார நாடுகள் உடனே முன்வர வேண்டும்.உலகம் முழுவதும் மீனங்காடி பஞ்சாயத்துகளை உருவாக்க இந்த நிதி உதவும்.

கார்பன் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு என்பது விவசாய உற்பத்தி, கட்டுப்படியான விலை, பொது விநியோகம், நல்ல வேலைவாய்ப்பு, வருமானம் அனைத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். இனி, ஒரு தலைமுறைக்குப் பத்திரமாக நாம் திரும்பித் தர வேண்டிய இந்தப் பூமியைப் பாதுகாப்போம்.

> இது, பி.எஸ்.போஸ்பாண்டியன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in