

பெருநகரங்களில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருவதால் டீசல் மூலம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளை இயக்க சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாட்டின் பல நகரங்களில் மின்சாரப் பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களுரூவில் மின்சாரப் பேருந்து இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு 64 நகரங்களில் 5,595 மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பின்படி இந்தியாவில் தற்போது புனே, பெங்களுரூ, டெல்லி, அகமதாபாத், ஹைதாராபாத் உள்ளிட்ட நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கே.எப்.டபிள்யூ வங்கி நிதி உதவியின் கீழ் சென்னையில் மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
500 பேருந்துகளையும் 2024-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 3,454 பேருந்துகள் உள்ளன. தினசரி 30 லட்சம் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். 500 பேருந்துகளில் முதல் கட்டமாக 100 பேருந்துகளை வாங்க சாலை போக்குவரத்து நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முக்கிய அம்சங்கள்:
இந்த வசதிகளுடன் முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் குறிப்பட்ட காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டால் 3 முதல் 6 மாத காலத்தில் சென்னையில் சாலைகளில் மின்சார பேருந்துகள் ஓட வாய்ப்புள்ளது.