

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில் பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை பொதுமக்கள் முன்கூட்டியே தரும் அடிப்படையில், ஒவ்வொரு சனிக் கிழமையும் அகற்றப்பட்டுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று 75 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 59.70 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது.