

புதுடெல்லி: டெல்லியில் மாசுவைக் குறைக்க செயற்கை மழை அவசியம் என்று முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் கிளவுட் சீடிங் எனப்படும் செயற்கை மழை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் டெல்லியில் நேற்று செயற்கை மழை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
வானிலை நிலைமைகள் சாதகமாக, குறிப்பாகப் போதுமான மேக அடர்த்தி மற்றும் ஈரப்பதம் இருந்தால், வரும் 29, 30-ம் தேதியன்று மேக விதைப்பு விமானம் மூலம் வடமேற்கு டெல்லியில் ஐந்து இடங்களில் முதன்முறையாக செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலைமைகள் சாதகமாக இருந்தால், அக்டோபா் 29-ம் தேதிடெல்லியில் முதல் செயற்கை மழை பெய்யக்கூடும். மாசுபாட்டுக்கு எதிரான டெல்லியின் போராட்டத்தில் இது ஒரு தொழில்நுட்ப மைல்கல்லைக் குறிக்கிறது. இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.