4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு

4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் சூரிய ஒளி மின்​சார உற்​பத்​திக்​காக 40 மெகா​வாட் சோலார் கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பசுமை எரிசக்தி கழகம் டெண்​டர் கோரி​யுள்​ளது.

தமிழக அரசு அலு​வல​கங்​களில் தின​மும் பகல் நேர மின்​சா​ரத் தேவைக்கு ஏற்ற திறனுடன் சோலார் பேனல் அமைக்க அரசு கடந்த 2023-ம் ஆண்டு முடிவு செய்​து, அதற்​கான திட்​டத்தை அறி​வித்​தது. சில அரசு அலு​வல​கங்​களில் இத்​திட்​டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.

டெண்டருக்கு அக்.27 கடைசி: இந்​நிலை​யில், மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு அலு​வலக கட்​டிடங்​களி​லும் தலா 40 மெகா​வாட் திறனுடைய சோலார் கட்டமைப்புகளை நிறுவ தமிழ்​நாடு பசுமை எரிசக்திக் கழகம் திட்​ட​மிட்​டது. முதல்​கட்​ட​மாக சென்னை மற்​றும் புறநகர் மாவட்​டங்​களில் மட்​டும் இந்த திட்​டத்தை செயல்​படுத்த டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது. அதன்​படி, அக்​டோபர் 15 முதல் 27-ம் தேதிவரை நிறு​வனங்​கள் தங்​களது டெண்டரை சமர்ப்​பிக்​கலாம். அக்​.28-ம் தேதி டெண்டர் விண்ணப்பங்கள் திறக்​கப்​படும்.

இதுகுறித்து பசுமை எரிசக்தி கழக அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை, திரு​வள்​ளூர் காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு ஆகிய மாவட்​டங்​களில் உள்ள அரசு அலு​வலக கட்​டிடங்​களில் சோலார் மின்சார கட்டமைப்புகளை நிறுவுவதற்கு முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதற்கு ஏற்ற கட்​டிடங்​களை அடை​யாளம் காணும் பணி நடந்து வரு​கிறது. சென்​னை​யில் பல இடங்​களை தேர்வு செய்து ஆய்வு நடத்தி வரு​கிறோம். 5 கிலோ​வாட் மற்​றும் அதற்கு மேல் மின்​சா​ரம் பயன்​படுத்​துகிற, அதிக மின்​சா​ரத் தேவை உள்ள அரசு கட்​டிடங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும்.

25 ஆண்டு பராமரிப்பு: டெண்​டரில் பங்​கேற்​கும் நிறு​வனங்​களில், ஒரு யூனிட் மின்​சா​ரத்​துக்கு குறைந்த விலை கோரும் நிறு​வனத்​துக்கு ஆணை வழங்​கப்​படும். அந்த நிறு​வனம் தனது செல​வில் மின் நிலை​யம் அமைத்​து, 25 ஆண்​டு​கள் பராமரிக்க வேண்​டும். மாதம்​தோறும் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்​துக்​கான விலையை கணக்​கிட்​டு, பசுமை எரிசக்தி கழகம் வழங்​கும். இந்த திட்​டம் முழு​மை​யாக செயல்​படுத்​தப்​பட்​டால் அரசு அலு​வல​கங்​களுக்கு மின் கட்​டண செலவு 40-50 சதவீதம் வரை குறை​யும். இவ்​வாறு அவர்கள்​ கூறினர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in