Published : 09 Jun 2025 03:41 PM
Last Updated : 09 Jun 2025 03:41 PM

டெல்லியில் 70 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு: முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை நடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியில் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பள்ளியிலும் ‘ஏக் பெட் மா கே நாம்’ திட்டத்தின் இரண்டாவது தொடரில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லியை பசுமையாக்கும் வகையில் நமது இயற்கை மற்றும் பூமி அன்னையின் பெயரில் ஒவ்வொரு நபரும், சமூக அமைப்பும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த பருவத்தில் 70 லட்சம் மரங்களை நடுவதற்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதைச் செய்வதன் மூலம் டெல்லியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.

மேலும், ரேகா குப்தா தனது எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய பிரச்சாரத்தின் கீழ், இன்று என் தாயாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு குங்குமப்பூ செடியை நட்டேன். இந்த மரத்தின் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் சிந்தூர் இந்திய பெண்களின் வீரம், மரியாதை மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகும். இந்த செடி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடையாளமாக மாறுவது மட்டுமல்லாமல், ' ஆபரேஷன் சிந்தூர்' என்ற வீர காவியத்தையும் நமக்கு எப்போதும் நினைவூட்டும்.

இந்தியா இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது, மேலும் பிரதமரால் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம் நமது உணர்வு மற்றும் வளரும் நாட்டின் சிந்தனையை வரையறுக்கிறது. டெல்லியை ஒரு தலைநகராக மட்டுமல்லாமல், பசுமை, தூய்மை மற்றும் இரக்கத்தின் அடையாளமாக மாற்றுவதே எங்கள் உறுதி. இதற்காக, இந்த ஆண்டு 70 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதனால் வரும் தலைமுறைகளுக்கு பசுமையான மற்றும் ஆரோக்கியமான டெல்லியை வழங்க முடியும்" என்று ரேகா குப்தா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x