

மதுரை: உலகளவில் பிளாஸ்டிக் மாசு பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும், விழிப் புணர்வையும் கொண்டிருந்தனர். அதற்கு இலக்கியங்களில் கூட ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கி யத்துக்கும் கெடுதலை உண்டாக்குகிறது.
இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங் கியல் துறை பேராசிரியர் எம்.ராஜேஷ் கூறியதாவது: 2025-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினம், ‘பிளாஸ்டிக்கை முறியடிப்போம்’ என்ற பிரச்சாரம் உலகம் முழுவதும் முன்னெடுக் கப்படுகிறது. ஆழமான பெருங்கடல்கள் முதல் மிக உயர்ந்த மலை கள் வரை, பிளாஸ்டிக் கழிவுகள் இப்போது எல்லா இடங் களிலும் காணப்படுகின்றன. இவை நிலப்பரப்புகளை குப்பைகளாக்குகின்றன. வன விலங்கு களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
பிளாஸ்டிக் முதன்முதலில் 1900-களின் முற்பகுதியில் ஒரு புரட்சிகர பொருளாக உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதன் பயன்பாடு வேகமாக விரிவடைந்தது. 1950 களில், பேக்கேஜிங், கட்டுமானம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பலவற்றுக்கான தீர்வுகளை வழங்கியது.
இன்று உல களாவிய பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டுக்கு 400 மில்லியன் டன்களை தாண்டியது. அதன் பெரும்பகுதி பிளாஸ்டிக் நிமிடங்களில் பயன்படுத்தி குப்பையில் கொட்டப்படுகிறது. அவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மண்ணில் தங்கி சுற்றுச்சூழலுக்கும், மனிதர் களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் பேராபத்தை விளைவிக்கின்றன.
ஒரு காலத்தில் அதிசயப் பொருள் போல் தோன்றிய ஒன்று, கிரகத்தின் மிகவும் அழுத்தமான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியுள்ளது. நாம் ஒவ்வொருவரும் இந்த காற்று மண்டலத்தில் பதிக்கும் கார்பன் கால் தடங்களை குறைக்க வேண் டும். ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவு கார்பனை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கிறான்.
தற்போது உள்ள நிலவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக் கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடு செய்து நாம் விட்டுச் செல்லும் ‘கார்பன்' கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும். செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். எனவே, படித்துவிட்டு செய்தித்தாளைக் கீழே வீசவேண்டாம். ஒரு மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப் படுவதை தவிர்க்கலாம்.
உணவுப் பதார்த்தங்களை கொண்டு செல்லும்போது, பதார்த்தங்களை எடுத்துச்செல்ல பாத்திரங்களைப் பயன்படுத் தலாம். ஒரு நுகர்வோராக பொறுப்பை உணர்ந்து செயல் படுவதன் மூலம் மகத்தான மாற்றத்தை உண்டாக்க முடி யும். 1950-ம் ஆண்டில் 2.3 மில்லியன் டன்கள், 2015-ம் ஆண்டில் 448 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டன, 2050-ம் ஆண்டில் 800 மில்லியன் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் பாதி கடந்த 15 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ் டிக்குகள் உடனடியாக உப யோகித்து அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, பெரும்பாலும் குப்பைத் தொட்டிகள் அல்லது சுற்றுச்சூழலில் கழிவாக முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.